திருமாவளவன் சொத்து விபரம்

thirumavalavan11

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிடம் ரூ. 39.78 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் ரூ. 39.78 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர ரூ. 25.77 லட்சம் மதிப்புள்ள பூர்விக சொத்தும் திருமாவளவனுக்கு உள்ளது.

மேலும் 2014-15 நிதி ஆண்டில் ரூ. 12.06 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர வங்கியில் ரூ. 6.63 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக கார் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள திருமாவளவன், தங்க, வெள்ளி நகைகள் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி