அதிமுகவில் இணைந்தார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

sr

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன். பிறகு, அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.