காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்.. தமிழிசை சொல்லும் காரணம்

 

tamilisai1111

 

தேச விரோதமாக நடந்து கொண்டவர் ப. சிதம்பரம், தேச விரோதமாக நடந்து கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே தேச பக்தர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமான வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாம் முறையாக அவர் தீவிரவாதி இல்லை என்று திருத்திய ப. சிதம்பரம் ரகசியம் அம்பலமான நிலையில் காங்கிரஸின் தேசவிரோத கூட்டணிக்கு தேச பக்தர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என வேண்டுவதாக தமிழிசை கூறியுள்ளார்.

இஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான் என டேவிட் ஹேட்லியும் ஒப்புக் கொண்ட நிலையில், இவ்வழக்கின் முதல் பிரமாண வாக்குமூலத்தில் அவர் தீவிரவாதிதான் என்று கையெழுத்து இட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுமென்றே அரசியல் லாபம் கருதி, மோடியை சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற அரசியல் லாபம் கருதி, இஷ்ரத் ஜகான் தீவிரவாதியல்ல என்ற திருத்தியுள்ளார்.

எனவே தேசத் துரோகம் செய்த காங்கிரசுக்கும், அதன் கூட்டணிக்கும் தமிழக வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சரியா? என்பதை தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கருணாநிதி யோசிக்க வேண்டும். தமிழ்நாடு இவர்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் தமிழிசை.