தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்

ras

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவோடு, பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரிலும், தனது மனைவி தயாளுஅம்மாள், துணைவியார் ராஜாத்திஅம்மாள் பெயரிலும் உள்ள சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

அதன் விவரம் :

தி.மு.க. தலைவர் கலைஞர் தாக்கல் செய்த சொத்துபட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 என்றும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை என்றும் கையில் உள்ள ரொக்கம் ரூ.50 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது பெயரில் வீடு, வாகனங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மனைவி தயாளு அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.10 ஆயிரம் என்றும், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 178 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 3 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.56,850 என்றும், அசையும் சொத்து ரூ.37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ.11 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 427 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.