விடுதலை சிறுத்தைகள் – இறுதிப்பட்டியல் வெளியீடு

Thiruma

நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து முதல்கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 11 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

நேற்று வெளியிடப்பட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திருமாவளவனும், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் கல்வியாளர் வே.வசந்தி தேவியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது,. இந்நிலையில் மீதமுள்ள 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

அதன் விவரம்: திருவள்ளூர்- அ.பாலசிங்கம், வானூர்- மா.தமிழச்செல்வன், அரக்கோணம்- கோபிநாத் என்ற இளஞ்சேகுவாரா, அரூர்- கி.கோவேந்தன், மானாமதுரை- கு.பாவலன், திருவிடைமருதூர்- சா.விவேகானந்தன், பொன்னேரி- மீஞ்சூர் செந்தில், சோழவந்தான்- இரா.பாண்டியம்மாள், பரமக்குடி- ம.இருளன், ஆத்தூர்- ப.ஆதித்யன், ஸ்ரீபெரும்புதூர்- மா.வீரக்குமார், கள்ளக்குறிச்சி- இராம மூர்த்தி.