மதுரையில் இன்று விஜயகாந்த் பிரச்சாரம்

va

மதுரையில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் 7 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மதுரையில் பிரசாரம் செய்ய உள்ளார். இதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுக்கூட்டம் இன்று மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற உள்ளது.

இத்தகவலை தேமுதிகவின் மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் டி.சிவமுத்துக்குமார் தெரிவித்தார்.