விஜயகாந்த் வேட்புமனு ஏற்பு

via
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 25ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் விஜயகாந்த் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.