விஜயகாந்த் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்

 

vijak77

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் நாளை 27 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌, மக்கள் நலக் கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ்‌ ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனையொட்டி நாளை 27.4.2016 புதன்கிழமை காலை 12.00 மணிக்கு மேல் உளுந்தூர்பேட்டையில் உள்ள தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜயகாந்த் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

தேமுதிக இளைஞரணி தலைவர் எல்.கே.சுதிஷ் தலைமையில் உளுந்தூர்பேட்டை தேர்தல் பணி மனையில் கூட்டணி கட்சி நிர்வாகி்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடந்தது.

கார்ட்டூன் கேலரி