கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, அர்ஜுனா விருதுக்கு ரகானே பெயர் பரிந்துரை

virat

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைகள் குறித்து பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலியும் அர்ஜூனா விருதுக்கு ரஹானேவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.