நாங்கள் வெற்றி பெறுவது உறுதி – ஜி.கே.வாசன் பேச்சு

gkw

தே.மு.தி.க, த.மா.கா, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் பிராசாரம் செய்தார். ஈரோடு அடுத்த சித்தோடு நால்ரோட்டில் நேற்று இரவு பிராசாரம் செய்தார்.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டாக தி.மு.க, அ.தி.மு.க மாறி மாறி தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இரு கட்சிகளின் ஊழல் ஆட்சியில் இருந்து முற்றிலுமாக தமிழகத்தை விடுவிக்க இந்த தேர்தல் நடக்கிறது.

மக்கள் விரும்பும் நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகம் கொண்ட ஆட்சியை விஜயகாந்த் கொடுப்பார். இதற்காகவே நானும், விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சென்று எங்கள் ஆட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

நாங்கள் ஆட்சி அமைத்ததும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படும். பொது சுத்திகரிப்பு நிலையம், கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். நெல், கரும்பு, மஞ்சளுக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க, தி.மு.க கட்சிக்கு பண பலம் இருக்கலாம், ஆள்பலம் இருக்கலாம், அதிகார பலம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு (மக்கள் நலக்கூட்டணிக்கு) மக்கள் பலம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றிக்காக தே.மு.தி.க, த.மா.க, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.