முதலமைச்சராக இதை விட என்ன தகுதி வேண்டும் : விஜயகாந்த் விளக்கம்

Tanjore-Vijayakanth
தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி சார்பில் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தே.மு.தி.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியபோது, ’’முதலமைச்சராக விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது அப்பா, அம்மா கிராமத்தில் பிறந்தவர்கள். முதலமைச்சராக இதை விட என்ன தகுதி வேண்டும்’’என்று கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும், ‘’விஜயகாந்த் செல்லும் இடங்களில் எல்லாம் யாரையாவது அடிக்கிறார் என்று கூறுகிறார்கள். தவறு எங்கு நடந்தாலும் தண்டிக்க தயங்க மாட்டேன். எனக்கு நடிக்க தெரியாது’’என்று தெரிவித்தார்.

You may have missed