8-வது முறையாக அதிமுக வேட்பாளர் மாற்றம்: கும்பகோணம் தொகுதியின் புதிய வேட்பாளர் ரத்னா

admk

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை எட்டாவது முறையாக அக்கட்சியின் தலைமை மாற்றியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருப்பதால் பிரச்சாரம் சூடுபிடித்து, வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கட்சியினரிடையே ஏற்படும் அதிருப்தி மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீதான புகார்களை தொடர்ந்து சில தொகுதிகளில் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் மாற்றி வருகின்றன.

அவ்வகையில், ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் இதுவரை ஏழு தொகுதிகளில் பழைய வேட்பாளர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை மாற்றி அறிவித்துள்ளது.

இந்நிலையில், கும்பகோணம் தொகுதியின் வேட்பாளராக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ராம.ராமநாதன் என்பவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக எஸ். ரத்னா என்பவர் போட்டியிடுவார் என அ.தி.மு.க. தலைமை இன்று அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி