ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு

evks

திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி தாராபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அந்த கூட்டத்தில் இளங்கோவன் பேசிய சி.டியையும் கொடுத்தனர்.

இதையடுத்து இளங்கோவன் மீது 153 (மக்கள் மத்தியில் கேவலமாக பேசுதல்), 504,505 (வரம்பு மீறி இழிவான வார்த்தைகள் பேசுதல்), 1998 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.