60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்

nad

நடிகர் விஜய் நடித்துள்ள தெறி படம் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மேலும் மகேந்திரன், நடிகை மீனாவின் குழந்தை நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளையில் இருக்கும் 60 குழந்தைகள் நடிகர் விஜய் நடித்த தெறி படத்தை பார்க்க விரும்பினர்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் விஜய்யிடம் தொலைபேசியில் பேசினார். குழந்தைகள் படத்தை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். படத்தை பார்ப்பதற்கு பிரத்யேக காட்சிக்கு நடிகர் விஜய் ஏற்பாடு செய்தார். படத்தை பார்த்து ரசித்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.