amith sha
பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வரும் மே 4-ம் தேதி மதுரையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.ஆர்.மகாலட்சுமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மே 1-ம் தேதி வெங்கய்யா நாயுடு பிரசாரம் செய்யவுள்ளார்.
மே 4-ம் தேதி பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பேசவுள்ளார். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 6 மற்றும் 8-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றார்.