m
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோட்டில் இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வரும் நரேந்திர மோடி முதலில் தமிழர்களின் கோரிக்கைக்கு பதில் சொல்ல வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதில் காளைகள் அறிய விலங்கினங்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கவில்லை. இதனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பால் நடத்த முடியவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசுதான்.
அதேபோல விவசாய விளைநிலங்களின் வழியாக கெயில் குழாய் அமைத்தது மத்திய அரசின் முடிவு. உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வரும்போது மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும். விவசாயிகளின் விளை நிலங்களின் வழியாக கெயில் குழாய் அமைத்தால் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களை இழப்பார்கள். மத்திய அரசு இதற்கு தனிச் சட்டம் இயற்றியிருந்தால் விவசாய விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் குழாய் அமைக்கும் திட்டத்தை நிறுத்தியிருக்கலாம். கெயில் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆக இதற்கும் பிரதமர் மோடி பதிலளித்துவீட்டு தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வரலாம் என கூறிய அவர் மேலும், பண பலத்தாலும், வன்முறையாலும் தேர்தலை சந்திக்கலாம் என அதிமுக மற்றும் திமுக தேர்தலை சந்திக்கிறது. மக்கள் மாற்றத்தை நோக்கி செல்ல முடிவு செய்துவிட்டார்கள். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.