vin
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை பகல் 12.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி 33 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 6 செயற்கைக் கோள்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டு ஏவுவதற்கான கவுண்ட்டவுண் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி. சி33 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பகல் 12.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் 598 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும்.
இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
இந்தியாவுக்கான வழிகாட்டி: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஜி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினால் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்.
அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து இத்தொழில்நுட்பத்தை சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துவிடும்.