சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் நீக்கம் – ஜெ அறிவிப்பு

jaya_

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.செல்வராஜூ எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை மாவட்ட கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராக எஸ்.சவுண்டப்பன் (மாநகராட்சி மேயர்), வி.பன்னீர்செல்வம் (மாவட்ட அவைத்தலைவர்), எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். தொண்டர்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.