சக்திமான் குதிரை உயிரிழந்தது

 

Police-horse-Shaktiman
சக்திமான் என்ற வெள்ளை குதிரை கடந்த 7 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநில காவல் துறையில் பணி யாற்றி வந்தது. இந்நிலையில், பாஜக சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த போராட்டத் தின்போது, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தாக்கியதில் குதிரையின் இடது பின்னங்கால் முறிந்தது. இதையடுத்து உடைந்த கால் அகற்றப்பட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.

செயற்கை கால் பொருத்தப்பட்டதால், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த இந்த குதிரை உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.