தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் – வானிலை மையம் தகவல்

vani

தமிழகத்தில் கோடைக்காலத்தின் உச்சகட்ட  அனல் வீசும்  அக்னி நட்சத்திர காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்கப்போகிறது.  கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டின் கத்திரி வெயில் சீசன் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் தற்போதுள்ள வெப்பநிலையை விட மேலும் அதிகரிக்கும். தற்போது உள்ளதைவிட 2-3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையைப் பொருத்து வெப்பநிலை மாறுபடும். சென்னையைப் பொருத்தவரை வெப்ப நிலை அதிகரிக்கும். தற்போதைககு மழைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai, director Balachandran, heat, meteorological, tamil nadu, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, வெப்பம்
-=-