5 election
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே அங்கு 4 கட்டங்களாக 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. சனிக்கிழமை 53 தொகுதிகளுக்கு 5–வது கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்காக 14,565 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகுதிகளில் சுமார் 1 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் 349 பேரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர். இந்த வேட்பாளர்களில் 43 பேர் பெண்கள் ஆவர். முதல்–மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் கொல்கத்தாவின் பவானிப்பூர் தொகுதியிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தீபாதாஸ் முன்சியும், பா.ஜனதா சார்பில் மறைந்த சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜியின் உறவினர் சந்திரகுமார் போஸ்சும் போட்டியிடுகின்றனர்.
எஞ்சிய 25 தொகுதிகளில் 6–வது கட்ட தேர்தல் வருகிற 5–ந்தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19–ந்தேதி நடைபெறுகிறது.