தமாகாவில் இருந்து மேலும் 3 பேர் வெளியேறினர் – அதிமுகவில் இணைந்தனர்

gkvasanpressmeet

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டனர். திமுக, அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமாகாவில் இருந்து மேலும் 3 மாவட்ட தலைவர்கள் வெளியேறியுள்ளனர்.
மத்திய சென்னை மாவட்ட தலைவர் கதிரவன், கோவை மாநகர மாவட்ட தலைவர் வக்கீல் மனோகரன், நீலகிரி மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் தமாகாவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

கார்ட்டூன் கேலரி