எழுவர் விடுதலைக்காக எழும்பூர் முதல் தலைமைச் செயலகம் வரை  வாகன பேரணி

சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யக்கோரி வேலூர் முதல் சென்னை கோட்டை வரை நடைபெறவிருந்த வாகனப் பேரணி, எழும்பூரிலிருந்து தலைமைச் செயலகம் வரை செல்லும் பேரணியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

murugan-7more

“வேலூரில் இருந்து வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதிக்க வில்லை. ஆகவே  மதியம் ஒரு மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து  தலைமைச் செயலகம் வரை பேரணியாக செல்கிறது. அங்கு  முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க உள்ளது” என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, “எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து துவங்கும் பேரணி,  எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் லேங்ஸ் கார்ட்ன் -பாந்தியன் ரோடு சந்திப்பில் முடிவடையும். ,அங்கிருந்து அற்புதம் அம்மாள் தலைமையில் ஒரு குழுவினர் மட்டும் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் இடத்தில் மனு அளிப்க்கபார்கள்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

You may have missed