ரெயிலில் தானியங்கி கதவுகள்: சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

மின்சார ரெயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரெயில்வே மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலையில் பகுதியில்   மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தபோது,  படிக்கட்டில் பயணித்தவர்கள் அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இவர்களில் பள்ளி மாணவன் உள்பட  5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் இயக்கப்படும் புறநகர் மற்றும் மாடி ரெயில்களில் பாதுகாப் பான பயணத்தை முன்னிட்டு  தானியங்கி கதவு அமைக்கக்கோரி வழக்கு வழக்கறிஞர் சதீஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு, ரெயில்வேத்துறை வரும் ஆக.7 ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது,

தற்போது மெட்ரோ ரெயில் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ஒருசில அதிவிரைவு ரெயில்களில் ஆட்டோமேடிக் கதவுகள் உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.