திருச்செந்தூர்:

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்து விட்டதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வரலாறு காரணாத சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் 2030ம் ஆண்டுக்கு பிறகு மின்சார வாகனங்க ளுக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக மோட்டார் வாகன தொழிற்சாலைகள் மூடும் அபாய நிலையக்கு தள்ளப்பட்டு உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.பி.சம்பத்,  இந்தியாவில்  மெட்ரோ ரயில்களின் வரவால் ஆட்டோ மொபைல் மற்றும் வாகன உற்பத்தி குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில்  வாகன உற்பத்தி துறையில் தொழிலாளர்களின் வேலை பாதிக்காத சூழ்நிலையை  தமிழக அரசு உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் விஞ்ஞானிகளாகவும், அறிஞர்களாகவும் இருப்பார்கள் போலும்….  புதுப்புதுக் தகவல்களை தெரிவித்து மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள்…. என்ன செய்வது… 500க்கும் 1000க்கும் ஆசைப்பட்ட தமிழக மக்களின் தலையெழுத்து…