‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் படமாகும் சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை…..!

 

1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணிக் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.

இந்த போராட்டங்களையும் அவரின் திரை துறை அனுபவங்களையும் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் படமாக்குகிறார்கள்.

காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் எச்.முரளியும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.