“சில்க்’’ ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் முதல் தமிழ்படம்..

 

கவர்ச்சி நடிகைகளுக்கு, முன் மாதிரியாக இருந்தவர்- ‘சில்க்’ ஸ்மிதா. இவருக்கு முன்னாலும், பின்னாலும் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருந்தாலும், முகத்திலும், உடலிலும் ‘கிளாமர்’ உள்ள நடிகையாக திகழ்ந்தவர் ஸ்மிதா.

அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, வித்யாபாலன் நடித்த “டர்ட்டி பிக்சர்” (இந்தி), வீணா நடித்த ‘’டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் மகா” (கன்னடம்), சானாகானின் ‘’ கிளைமாக்ஸ்’’ (மலையாளம்) ஆகிய 3 படங்கள் ஏற்கனவே வந்துள்ளன.

தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை “அவள் அப்படித்தான்’’ என்ற பெயரில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும், முரளியும் இணைந்து படமாக தயாரிக்கிறார்கள். படம் குறித்து சித்ரா லட்சுமணன் தெரிவித்த தகவல்கள்:

‘’டர்ட்டி பிக்சர்’ படம் சில்க் ஸ்மிதாவின் கிளாமர் பக்கத்தை மட்டுமே சித்தரித்தது. ஆனால் இந்த படத்தில் ஒரு சாதாரண பெண் ஒப்பனை உதவியாளர், சினிமா துறையில் உயர்ந்த இடத்துக்கு எப்படி வந்தார் என்பதையும், அவர் எதிர் கொண்ட சவால்களையும் சித்தரிக்கும் .

சில்க் ஸ்மிதாவாக நடிக்க புதுமுகத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். புதுமுக நடிகையால் மட்டுமே, ஸ்மிதா கேரக்டருக்கு உயிர் கொடுக்க முடியும்.

சில்க் ஸ்மிதா வேடத்துக்கு பொருத்தமான நடிகை கிடைத்த பிறகே, மற்ற நடிகர்- நடிகைகள் குறித்து முடிவு செய்வோம்.’’ என்கிறார், சித்ரா லட்சுமணன்.

-பா.பாரதி.