1978 ஆம் ஆண்டு ருத்ரயா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ருத்ரயா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில், ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்வது குறித்து ஆலோசித்து வரும் ஸ்ரீபிரியா, கமல் ரோலில் சூர்யாவையும், ரஜினி ரோலில் தனுஷையும், அவர் நடித்த வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.