டில்லி

பெண் விமான அதிகாரி அவானி சதுர்வேதி போர் விமானத்தில் தனியாகப் பறந்த முதல் இந்தியப் பெண் என்னும் சரித்திர சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் ராணுவத்தில் பல பெண்கள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர்.    குறிப்பாக விமானப் படையில் போர் விமானங்களை ஓட்டும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் மூன்று பெண்கள் போர் விமானங்களை இயக்கும் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.  அவர்கள் அவானி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகிய மூன்று பெண் அதிகாரிகள் ஆவார்கள்.

இவர்களில் ஒருவரான அவானி சதுர்வேதி ஜெட் விமானமான பிசி 7 போன்ற விமானங்களை திறம்பட செலுத்தி உள்ளார்.  அவர் சமீபத்தில் மிக் 21 ரக போர் விமானத்தை தனியாக வானில் செலுத்தி உள்ளார்.   இந்த விமானம் மணிக்கு 340 கிமீ வேகத்தில் பறக்கும் திறமை கொண்டது

இதன் மூலம் அவானி சதுர்வேதி போர் விமானத்தை தனியாக செலுத்திய முதல் இந்தியப் பெண் என்னும் சரித்திர சாதனையை நிகழ்த்தி உள்ளார்.   இதனால் அவருக்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றது.