மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் கைது

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவோ, இந்த வழக்கின் தீர்ப்பை பொங்கல் பண்டிகைக்குள் அளிக்கவோ உச்சநீதிமன்றம் மறு்துவிட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை காவல்துறை கைது செய்தது.

மதுரை அருகே கரிசல் குளத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 க்கும் மேற்பட்ட காளைகளும், 55 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இப்போது, மதுரை அவனியாபுரத்தில்  தடையை மீறி ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இன்று அதிகாலையிலேயே நுற்றுக்கணக்கான பொது மக்களும், மாடுபிடி வீரர்களும் திரண்டனர்.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். கூடியிருந்த பொது மக்கள் உற்சாக ஆரவாரம் புரிந்தனர்.

பிறகு காவல் துறையினர்,ஜல்லிக்கட்டு நடத்தியவர்களையும், மாடுபிடி வீரர்களையும் கைது செய்தனர்.