சென்னை:

அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ஈடுபடுவார்கள் சென்று மதுரை ஆட்சியர் கூறி உள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் முடித்துவைக்கப்பட்ட நிலையில்,லங்கா நல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று  மதுரை உயர்நீதி மன்றம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகள், அதை அடக்கும் காளைகள் என அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆட்சியர்,  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்று கூறி உள்ளார்.

மேலும்,  அவனியாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டியின்போது, பாதுகாப்பு பணியில் 760 காவலர்கள் ஈடுபட  இருப்பதாகவும், 10 ஆம்புலன்சுகள்  மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் குழுக்களளும்   போட்டி நடக்கும் இடத்தில் தயாராக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். இருப்பர் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.