`அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ டிரெய்லர்: 24 மணி நேரத்தில் 289 மில்லியன் பேர் பார்வையிட்டு புதிய சாதனை:

டுத்த ஆண்டு (2019)  மே மாதம் வெளியாக உள்ள `அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ டிரெய்லர் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

படத்தின் டிரெய்லர் வெளியாகிய முதல் 24 மணி நேரத்தில் 289 மில்லியன் பேர் பார்வையிட்டு சாதனை படைத்துள் ளது. இதற்கு முன்பு  230 மில்லியன் பேர் பார்வையிட்ட அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தை விட 60 மில்லியன் பேர் அதிகம் பார்த்து புதிய சாதனையை படைத்துள்ளது.

`அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’  படத்தின் அடுத்த பாகமான `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில்வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளது.

`அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படத்தில்  மார்வல் ஹீரோக்கள் ஸ்பைடர் மேன், அயன் மேன், டாக்டர் ஸ்ட்டிரேஜ், ஹல்க், பிளாக் பாந்தர் என்று ஒரு பட்டாளமே இந்த பிராபஞ்சத்தை காப்பாற்ற அதி பயங்கர வில்லனான தானோஸை எதிர்க்கிறது. இப்படத்தின் கதை,  பிராபஞ்சத்தின் உயிரினங்களை அழிக்க கூடிய ஆறு இன்பினிட்டி கற்களை தேடி பயணிக்கும் தானோஸை தடுக்கும் ஹீரோக்கள் என்று கதை படு அமர்க்களமாக சென்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக  `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தின் இறுக்கட்ட காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள், சமூக வீடியோ வலைதளமான யுடியூபில் 43 மில்லியன் பேரும், டிவிட்டரில் 35 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 28 மில்லியன் பேரும் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

டிரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…