ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆன அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிக்கட்டுகள்

--

நியுயார்க்

னைவரும் எதிர்பார்க்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்பட டிக்கட்டுகளை ஒரு ரசிகர் ஈ பே மூலம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

பாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் அவெஞ்சர்ஸ் வரிசையில் கடைசி திரைப்படமாகும்.    இந்த திரைப்படத்தின் இறுதி டீசர் வெளியான உடன் இதற்கான ஆன்லைன் முன்பதிவும் அமெரிக்காவில் தொடங்கியது.  இந்த திரைப்படத்தில்  ராபர்ட் டவுனி ஜுனியர், கிறிஸ் எவான்ஸ், மார்க் ருஃபலோ, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜெரிமி ரென்னெர், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த பட டிக்கட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே ஒரு வார டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.   இது திரைப்பட வரலாற்றில் முதல் முறையாகும்.   இதற்கு முன்பு ஸ்டார் வார்ஸ் திரைப்படத்துக்கு இவ்வாறு நடந்துள்ளது.   இன்னும் சுமார் 2 வாரங்களில் இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் டிக்கட்டுகளுக்கு எக்கச்சக்கமான கிராக்கி உள்ளது.

அதை ஒட்டி இணைய தளங்களான ஈ பே போன்ற ஏலம் விடும் தளங்களில் ஏற்கனவே பதிவு செய்தோர் தங்கள் டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்க தொடங்கி உள்ளனர்.   இவர்களில் ஒருவர் தனது இரு டிக்கட்டுகளையும் தலா $9,199 அதாவது ரூ.6,40,000 க்கு விற்பனை செய்துள்ளார்.  இது படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட்டுகள் ஆகும்.

தற்போதுள்ள நிலையில் இந்த படத்துக்கான மற்ற நாட்களுக்கான டிக்கட்டுகள் $ 100 டாலரில் இருந்து $300 ஆரம்ப விலையில் உள்ளன.

இந்த திரைப்படம் இந்தியாவில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.