அவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…!

திருப்பூர்: அவினாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

அன்னூா் அருகே உள்ள சொக்கம்பாளையம், காந்திஜி காலனியில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி  வசித்து வந்தார். 81 வயதான அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். மறைந்த பழனிச்சாமிக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனா். அவரது மனைவி மற்றும் ஒரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டனா்.

பழனிச்சாமி 1977ம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்பு 1980ம் ஆண்டு மற்றும் 1989ம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் தோல்வியை தழுவினார்.