ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும்  விடை பெறுகிறது..

--

ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும்  விடை பெறுகிறது..

சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம், ராஜேஸ்வரி தியேட்டர், தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியாரால் ( ஏவி.எம்) வார்த்தெடுக்கப்பட்ட ‘ குழந்தை’ என்று சொல்லலாம்.

சொந்தமாக ஸ்டிடுயோ வைத்திருந்த ஏவி.எம்.முக்கு சொந்த தியேட்டர் நடத்த ஆசை.

அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த இரு தியேட்டர்களை வாங்க அவர் திட்டமிட்டார். கடைசி நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், அவர் சொந்தமாகக் கட்டியது தான், ஏவி.எம். ராஜேஸ்வரி.

1979 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று இந்த தியேட்டர் திறக்கப்பட்டது.

அப்போது டிக்கெட் விலை என்ன தெரியுமா?

இரண்டு ரூபாய் 50 காசு.

ரஜினிகாந்த்,கமலஹாசன் படங்களை ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இந்த தியேட்டரில் தான் உலக சாதனை படைத்த ‘டைட்டானிக்’ திரையிடப்பட்டது.

9 மாதங்கள் அந்த படம் , இந்த தியேட்டரில் ஓடியுள்ளது.

சென்னையில் இடித்துத் தள்ளப்படும் சினிமா தியேட்டர்கள் வரிசையில், ராஜேஸ்வரி தியேட்டரும் இடம் பெறுவது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘இப்போதெல்லாம் வாரக் கடைசியில் தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். இந்த தொழிலில் நஷ்டம். எனவே தியேட்டரை மூடும் முடிவுக்கு வந்தோம்’’ என்கிறார்கள், இதன் உரிமையாளர்கள்.

–பா.பாரதி