சென்னை:

25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்வதால் போராட்டக்காரர்கள் ரயில் மீது பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக சேலத்தில் ரயில் மறியலில் இளைஞர்கள் ஈடுபட்டனர். சிலர் ரயில் கூரை மீது ஏறி ஓடினர். அப்போது லோகேஷ் குமார் என்ற மாணவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் சென்னை ரயில்வே போலீசார் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடுவோர் ரயில்களில் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரயில் படிகட்டில் பயணம் செய்தல், ரயில் கூரையின் மீது பயணம் செய்தல் போன்றவை படுகாயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய அபாயம் கொண்டதாகும். ரயில் கூரைக்கு மேல் செல்லும் மின்சார கம்பியில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்கிறது. அதனால் எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.