பார்த்திபனின்  ‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு விருது! மத்திய அரசு அறிவிப்பு!

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த பார்த்திபனின்  ‘ஒத்த செருப்பு’, மற்றும்   ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்தியஅரசு விருது அறிவித்துள்ளது.

பார்த்திபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ்-7.  மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர்  ஆகிய தமிழ் படங்களுக்கு விருது வழங்கப்படும் என  மத்திய அரசு அறிவித்து வெளியிட்டு உள்ளது.

பாரத்திபனின் . “ஒத்த செருப்பு சைஸ் 7 ”  படம்  2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை ஏற்கனவே வென்றுள்ளது. இந்த நிலையில், தற்போது மத்தியஅரசு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது

அதுபோல, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய  ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்துக்கும் மத்தியஅரசு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த திரைப்படமும் மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார்.