தமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை:

மிழக அறிவியல் அறிஞர்களுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில், தற்போது விடுபட்ட 2015, 2016, 2017ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அறிவியல் அறிஞர்களுக்கு  இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில்  தேர்வு செய்யப்பட்ட 29 அறிவியல் அறிஞர்களுக்கு விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். பின்னர் அவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கார்ட்டூன் கேலரி