சென்னை தான்சேன் அகாடமி விருது வழங்கும் விழா…!

சென்னையில் பண்டிட் பாலேஷின் தான்சேன் அகாடமி சார்பில், இசை யில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் நடந்தது.

இதில், ஷெனாய் மேதை ‘பாரத ரத்னா’ பிஸ்மில்லா கான் – பண்டிட் சென்ன பரமன்னா நினைவு கலா ரத்னா விருது பிரபல சிதார் மேதை உஸ்தாத் ஷாகித் பர்வேஸ் கானுக்கு வழங்கப்பட்டது.

இசை யமைப்பாளர் ரமேஷ் விநாயகம், `வீணை’ பார்த்தசாரதி ஆகியோருக்கு ‘கவுரவ் புரஸ்கார்’ விருதும், தபேலா கலைஞர் பிரசாத் லோஹருக்கு ‘யுவபுரஸ்கார்’ விருதும் வழங்கப்பட்டன.