வதந்திகளை தடுக்க தொலைக்காட்சி விளம்பரம் மூலம் விழிப்புணர்வு: வாட்ஸ்அப் தகவல்

டில்லி:

மூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் காரணமாக வன்முறைகள் ஏற்பட்டு வருகின் றன. இதை தடுக்க உச்சநீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் பிறப் பித்துள்ள நிலையில், வதந்திகளை தடுக்க தொலைக்காட்சி விளம்பரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக  வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.

சமீப காலமாக பசு வதை மற்றும் குழந்தைகள் கடத்தல் போன்ற  ‘வாட்ஸ் ஆப்’ வதந்திகளால் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம்,  “வாட்ஸ் ஆப்”, “பேஸ்புக்”, டிவிட்டர்  போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் போலி செய்திகள்  பரப்பும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து,   வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனத் திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கவும், நீக்கவும் வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது.

இதைத் தொடர்ந்து, ‘வாட்ஸ் ஆப்’பில் பரவும் வதந்தி களை கண்காணிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த குழுக்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.. அதன் காரணமாக வதந்திகளை எளிதில் கண்காணிக்க முடியும்  எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  தொலைக்காட்சி விளம்பர படங்கள் மூலம், ‘வாட்ஸ் ஆப்’பில் பரவும் வதந்தி களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம்  முடிவு செய்துள்ளது.  இதற்காக 60 வினாடிகள் ஓடும் மூன்று விளம்பர படங்களை, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விளம்பங்கள் விரைவில் தொலைக்காட்சிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.