டில்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும்  விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த மனுக்களை வாபஸ் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகம் முழுதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். இதனஅ விளைவாக தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்ததது. மத்திய அரசும், , ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்ததது.

இந்த இரு நடவடிக்கைகளையும் எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா உட்பட சில தனியார் அமைப்புகள்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

பிரதமர் மோடியே, தமிழர் கலாச்சாரத்தைக் காப்பதில் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான, இந்திய விலங்குகள் நல வாரியம், பிரதமரை மீறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளது.

இதையடுத்து  அந்த வழக்குகளை திரும்பப் பெறுமாறு விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆகவே தற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு “தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்: என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆகவே விலங்குகள் நலவாரியத்தால், ஜல்லிக்கட்டு எதிராக இனி வழக்குகள் தொடுக்கப்படாது என்று தெரியவருகிறது.