‘அயலான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘அயலான்’ . இந்தத் தலைப்புக்குக் கீழே ‘Destination Earth’ என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.

சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தைத் தயாரித்து வந்த 24 ஏ.எம். நிறுவனத்துடன் இப்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கை கோத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று மாலை அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது.

அதன்படி அயலான்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.