அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் வழக்கு: உச்சநீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை

டில்லி:

யோத்தியில் ராமர் கோவில் தொடர்பான அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் வழக்கு தொடர்பான மனுக்கள் மீது இன்று உச்சநீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு  விசாரணை நடத்துகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின்  அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய  இடம் அமைந்துள்ள பகுதி யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் கடந்த செப்டம்பர் 27ந்தேதி  உச்சநீதி மன்றம் கூறிய தீர்ப்பில், மசூதிகள் இஸ்லாம் மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டதா?  என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கை   அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற  மறுப்பு  தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் 29ந்தேதி முதல்  விசாரித்து தீர்ப்பளிக்கும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி மிஸ்ரா ஓய்வுபெற்ற நிலையில்,  தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.