அயோத்தி நில வழக்கு: நீதிபதி விலகலால் வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி:

யோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளதால், வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று முதல் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யுயு. லலித் மற்றும் டி.ஆர்.சந்திரச்சாத் ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று முதல் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பாக காணப்பட்டது. ஏராள மான காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு என்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,  அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகுவதாக அறிவித்து  உள்ளார்.  இதன் காரணமாக அரசியல் சாசன அமர்வில் புதிய நீதிபதியை சேர்க்கும் பொருட்டு வழக்கு விசாரணை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.