அயோத்தியில்  நிலத்தின் விலை  இரு மடங்காக  உயர்ந்தது…

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதால், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த மாதம் பூஜை போடப்பட்டது.
கோயில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

கோயில் கட்டுமானம் முடிந்து,ராமர் கோயில் திறக்கப்பட்ட பின், அயோத்தி சர்வதேச ஆன்மீக சுற்றுலா நகராகி விடும் என்பதால், அங்கு பல்வேறு தளங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

‘ சுற்றுலா பயணிகள் வசதிக்காக அயோத்தியில் 3 ஸ்டார் ஓட்டல்கள் கட்டப்படும், சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்படும்’’ என உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உலகின் கவனத்தை அயோத்தி ஈர்த்துள்ளதால், அங்கு நிலத்துக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர்,அயோத்தி நகரில் ஒரு சதுர அடி நிலம் 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இப்போது அங்கு ஒரு சதுர அடி நிலம் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ருபாய் வரை விலை போகிறது.

அயோத்தியில் நிலத்தின் விலை மேலும் உயர்ந்து கொண்டே போகும் என அங்குள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

-பா.பாரதி.