ராமர் கோவில் கட்டுமானப்பணி இன்று அயோத்தியில் ஆரம்பம்

யோத்தி

ன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி தொடங்க உள்ளது.

கடந்த 5 ஆம் தேதி அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடந்தது.  இதில் பிரதமர் மோடி, உபி முதல்வர், உபி ஆளுநர், ஆர் எஸ் எஸ் தலைவர்  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். பிரதம்ர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்த பூமி பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் உள்ளிட்டவை கடந்த 2 நாட்களாக அகற்றப்பட்டது.  அந்த பணிகள் முடிவடைந்ததால் இன்று ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளது.  இதில் சிவில் கட்டுமானப் பணிகள் எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டுமானப் பணிகள் இன்னும் மூன்றரை ஆண்டுகளில் முழுமையாக முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 2024 ஆம் அண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்குள் இந்த கோவில் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.