அயோத்தி ராமஜென்மபூமி தலைமை பூசாரி காலமானார்!

--

லக்னோ,

.பி.யில் சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள ராமர்கோவிலின் தலைமை பூசாரி  மோகந் பாஸ்கரதாஸ் காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவரது உயிர் அதிகாலை 3 மணி அளவில் பிரிந்தது.

89 வயதான பாஸ்கர் தாசுக்கு நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக பாரிதாபாத்தில் உள்ள ஹர்சன் ஹாட் இன்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிகாலை 3 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த பாஸ்கர் தாஸ், ராமஜென்ம பூமி நில விவகாரத்தில் நடைபெற்று வரும் வழக்கின் பிரதான வாதியாவார்.

சமீபத்தில் ராமஜென்ம பூமி வழக்கு விவகாரத்தில் ஈடுபட்டு வந்த ஹாசிம் அன்சாரி என்பவரும் கடந்த ஆண்டு மறைந்தது குறிப்பிடத்தக்கது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி மற்றும் பாபரி மஸ்ஜித் வளாகம் யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்சினை  1959ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.