பாஜகவுக்கு உதவும் இந்து அமைப்புக்கள் : ராமர் கோவில் அர்ச்சகர் கண்டனம்

--

யோத்தி

யோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோவிலின் அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் இந்து அமைப்புக்கள் பாஜவுக்கு அரசியல் உதவி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது குறித்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி மாதம் தள்ளி வைத்ததால் இந்து அமைப்புக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. சமீபத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சுமார் 2 ல்லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை கூட்டி தர்மசபை பேரணியை நடத்தியது. இது தேவையற்ற ஒரு செயல் என எதிர்கட்சிகள் கூறி உள்ளன.

ராமர் கோவில் தற்காலிகமாக கட்டிய போது அந்தக் கோவிலை நிர்வகிக்க அர்ச்சகர் ஒருவரை அரசு நியமித்தது. இந்த கோவிலில் ஏராளமான சர்ச்சைகள் இருந்ததால் கோவிலின் அர்ச்சகர் எந்த ஒரு அரசியல் கட்சியின் தொடர்பு இல்லாதவராகவும், குற்றவியல் பின்னணி இல்லாதவராகவும் தேடி ஆசார்ய சத்யேந்திர தாஸ் தேர்ந்தெடுக்கபட்டார். இவர் பூர்வாஞ்சல் மாவட்டத்தில் உள சந்த் கபிர் நகரில் பிறந்தவர். கடந்த 1958 முதல் அயோத்தியில் வசித்து வருபவர்.

இவர் சமஸ்கிருத மொழியில் மூன்று பட்டங்கள் பெற்று ஆசார்ய விருதை பெற்றவர் ஆவார். சத்யேந்திர தாஸ், “விஸ்வ இந்து பரிஷத் நடத்திய தர்மசபை கூட்டத்தின் இறுதி முடிவு என்ன? தீர்மானம் இயற்றுவது மட்டுமே. கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் போது கோவில் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கூட்டம் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக உதவ அமைக்கப்பட்ட கூட்டம் ஆகும்.

வி இ ப தான் இன்னும் பலம் பொருந்திய அமைப்பாக இருப்பதாக உலகுக்கு காட்ட விரும்பியது. அதுதான் இந்த கூட்டத்தின் இறுதி முடிவு. தேவை இல்லாமல் அங்கு ஒரு செங்கல்லை வைத்து விட்டு கட்டுமான பணியை தொடங்கியதாக கூறுவது தவறான மற்றும் இந்துக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஆகும். இதன் மூலம் வி இ ப ராமர் பக்தர்களை பாஜக வசம் இழுக்க முயல்கிறது.” என தெரிவித்துள்ளார்.

You may have missed