விஷாலின் ’அயோக்யா’ ரிலீஸ் ஆகவில்லை…!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திட்டமிட்டப்படி இன்று (மே 10) வெளியாகவில்லை.

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’.நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம், ஏப்ரல் 19-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தார்கள். இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் இன்று (மே 10) வெளியீடு என்று அறிவித்தார்கள்.

நேற்று வரை தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த ’அயோக்யா’ இன்று காலை வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Ayogya', release, venkat mohan, Vishal
-=-