‘அயோக்யா’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….!

 

வெங்கட் மோகன் இயக்கத்தில் , விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைப்பில் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்கிறார். விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்.19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே.17ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.